Business motivation Tamil : தொழில் துவங்க பணம் மட்டுமே தடையா? Mr. Ajith Kumar | MSNE Chennai

தொழில் துவங்க பணம் மட்டுமே தடையா?

வணக்கம் நண்பர்களே! 

நான் உங்கள் அஜித் குமார். உங்களில் பல பேருக்கு அப்பா அம்மா மீது கோபம் இருக்கும். அதற்கான காரணம் என் அப்பா, அம்மா மட்டும் சொத்து சேர்த்து வைத்து இருந்தால் அம்பானிக்கும், ரத்தன் டாட்டா விற்க்கும் போட்டியாக தொழில் துவங்கி சாதித்திருப்பேன் என்று. ஆனால் இது எல்லாம் உண்மை அல்ல நண்பர்களே. தொழில் துவங்க பணம் மட்டுமே தடையில்லை. இதற்கு உதாரணமாக சில சாதனை மனிதர்களை பற்றி காண்போம்.

இன்ஃபோசிஸ்:

இன்ஃபோசிஸ்னு உலகம் முழுக்க கொடி கட்டி பறக்கும் ஒரு கம்பெனிய கேள்வி பட்டிருப்பிங்க. இந்த இன்ஃபோசிஸ் அ தொடங்கும் போது நாராயணசாமி இடம் பணம் இல்லை. தன் மனைவி சுதா கொடுத்த பத்தாயிரம் ரூபாய் தான் அந்த  கம்பெனியை துவங்க உதவியது. 

Hot Breads:

இந்தியா, அமெரிக்கா என 18 நாடுகள், 68 உணவகங்கள், 18 பேக்கரிகள் என ஆண்டு விற்பனை 120 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஷாட் பிரட்ஸ் ( Hot Breads ) மகாதேவன் இளைஞராக‌ நம் சென்னைக்கு வந்த போது அவரது கையில் இருந்த பணம் வெறும் ஐநூறு ரூபாய் மட்டுமே. 

கோவை பழமுதிர் நிலையம்:

தமிழ்நாடு , கர்நாடகா , புதுச்சேரியில் 23 கிளைகள் , பழ இறக்குமதி , ஜூஸ் விற்பனை , காளான் வளர்ப்பு ஆகியவற்றோடு , ப்ளூகோட் ஸல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் மூலமாக ஐ . டி . துறையிலும் கால் பதித்திருக்கும் சின்னசாமி , கோவை பழமுதிர் நிலையம் தொடங்கினார் . அவருடைய முதல் கடை எது தெரியுமா ? தள்ளு வண்டி ! ஆமாம் , கோவை ஜவுளி மில்லில் வேலை பார்த்த சின்னசாமி , வீட்டுச் செலவுக்குப் பணம் போதாமல் , ஓய்வு நேரங்களில் தள்ளு வண்டியில் காய்கறி , பழங்களை வீட்டுக்கு வீடு கூவித் தொடங்கிய பிஸினஸ் இன்று பழமுதிர் குழுமமாக ( Pazhamudir Group ) வளர்ந்திருக்கிறது .
இவர்களில் அனுபவங்களின் படி தொழில் துவங்க, ஜெயிக்க பணம் மட்டுமே முக்கியம் அல்ல. பணத்துடன் சேர்த்து தொழில் அறிவு, தொழில் அனுபவம், விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவை இருந்தால் நீங்களும் தொழில் துவங்கி சாதிக்க முடியும். 

More Articles:

Content Reference:

YouTube channel:

Website:

கருத்துரையிடுக