How to Start a Business in Tamil | Business idea's in tamil | Business Startup Steps | Msme Chennai | Ajith Kumar M

வணக்கம் தொழில் முனைவோர்களே! 
நான் உங்கள் அஜித் குமார். MSNE Chennai - YouTube channel மற்றும் Blogger இன் Founder. இந்த கட்டுரையில் நான் உங்களுக்கு தொழில் தொடங்குவதற்கான அனைத்து வழிகள் பற்றி விவரமாகவும் உங்களுக்கு புரியும் வகையில் மிகத் தெளிவாகவும் எழுதியுள்ளேன். இதனை படித்து பயன் பெறுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் அவர்களுக்கும் பயன் பெறட்டும். 

தொழில்களின் வகைகள்:

தொழில்களை நாம் ஆரம்ப கால முதலே,
1. தயாரிப்பு தொழில் ( Manufacturing) 
2. சேவைத் தொழில் ( Service) 
3. வாங்கி விற்கும் தொழில் ( Buy and Selling) 
              - Trading
              - Retail
              - Wholesale
4. விவசாயம் சார்ந்த  தொழில்கள்
 என மேற்கண்ட வகைகளில் நாம் அனைத்து வகையான தொழில்களையும் அடக்கி விட முடியும். அந்த  வகைகளில் நாம் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் செய்யும் இரண்டும் அடங்கும். 

தொழில்களை நாம் இன்று  மூன்றுக்கும் மேற்பட்ட ஸ்கேல்களாக பிரிக்கின்றோம்:

1. Micro scale business (Cottage Business Include) 
2. Small scale business
3. Medium scale business
4. Large scale business (Champions) என அதன் முதலீடு மட்டும் இல்லாமல் Turnover மூலம் பிரிக்கலாம். 

இதனை Ministry of Micro Small Medium Enterprises கீழ்க்கண்டவாறு பிரித்துள்ளது:

Micro - 1 கோடிக்கு கீழே Investment மற்றும் 5 கோடிக்கு கீழே Turnover இருந்தால் 

Small - 1 கோடி முதல் 10 கோடிக்கு கீழே Investment மற்றும் 5 முதல் 50 கோடிக்கு கீழே Turnover இருந்தால்

Medium - 10 முதல் 50 கோடிக்கு கீழே Investment மற்றும் 50 முதல் 250 கீழே Turnover இருந்தால்

Large - 50 கோடிக்கு மேல் Investment மற்றும் 250 கோடிக்கு மேல் Turnover இருந்தால் Large மற்றும் Champion என வரையறுக்கப்படுகிறது.


குடிசைத் தொழில்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் (Some Example for Cottage Business )
1. மெழுகுவர்த்தி தயாரிப்பு
2. குளியல் சோப்பு தயாரிப்பு
3. பேப்பர் பை தயாரிப்பு
4. ஊதுபத்தி தயாரிப்பு
5. மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு
6. அப்பளம் தயாரிப்பு
7. ஜாம் தயாரிப்பு
8. ஊறுகாய் தயாரிப்பு
9. நூடுல்ஸ் தயாரிப்பு
10. வத்தல் வகைகள் தயாரிப்பு
11. சத்துமாவு தயாரிப்பு
12. கற்பூரம் தயாரிப்பு


போன்ற பல தொழில்கள் இந்த குடிசைத் தொழில்களில் அடங்கும் அதற்கான விளக்க வீடியோ பார்க்க நம் MSNE Chennai சேனலுக்கு செல்லுங்கள். 
உங்களில் நிறைய பேருக்கு தொழில் புரிய வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் எங்கு சென்று அதனை பற்றி கற்றுக் கொள்ளுவது எங்கு சென்று அதனை பற்றிய சந்தேகங்களை கேட்பது எங்கு சென்று தொழிலை பதிவு செய்வது என பல்வேறு அரசு அலுவலகங்களின் அலுவலக முகவரி தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரி என தகவல் அடங்கிய நம் கட்டுரையின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


நீங்கள் தொழில் முனைவோர் ஆக கடக்க வேண்டிய 10 படிநிலைகள்:

1. Conception of Project 
Visit: Dic, Edii, Msme di, Nsdc, 

2. Preparing Feasibility Study For project
Visit: Dcmsme Website, Kvic Website

3. Deciding From of Business 
Visit: http://easybusiness.tn.gov.in

4. Choosing Land and Building
Visit: Sidco, Sipcot, Tidco, Tngim

5. Go for Raw materials, plant and machinery
Visit: Tansidco, Nsic, Gem

6. Apply for License and Permits with Local authority
Visit: Dic, Msme

7. Financing of Project
Visit: Mudra, Standupmitra, Needs, Uyegp, Pmegp

8. Implementing Project
Visit: Edii-Edp training

9. Statutory Registration
Registrations: IT, GST, ESI, EPF, EPS

10. Planning and Organizing the business
Register to Start: Udyam registration, Fieo, msmedatabank, indiantrade portal, Zed, Ipindia, Digital Msme

மேற்கண்ட  பத்து படிநிலைகளை கடந்தால் நீங்கள் தொழில் முனைவோர்களாகி விட முடியும். ஆனால் அதில் நிலைத்து நிற்க கீழ் கண்ட படிநிலைகளை கடந்தால் மட்டுமே அதில் நிலைத்து நின்று சாதிக்க முடியும். 

1. நீங்கள் தொழிலில் நிலைத்து நிற்க 
உங்களுக்கு நீங்களே சவால் விட வேண்டும். 
2. உங்கள் தொழிலை விரும்பி செய்ய வேண்டும். 
3. நீங்கள் தொழில் அடுத்த கட்டம் நகர உங்கள் தொழிலில் நீங்கள் தான் ராஜா என நிலைத்து நிற்க தைரியமாக Risk எடுக்க வேண்டும். 
4. உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். 
5. உங்கள் இலக்கு என்ன என்பதை தீர்மானித்து செயல்படுங்கள். 
6. ஒரு நல்ல Business manக்கு தன்னுடைய customer யாரென்று தெரியும். 
7. உங்கள் தொழிலில் நிலைத்து நிற்க நீங்கள் சந்தை, மார்க்கெட்டிங், அரசாங்கம் என பல விதங்களில் உங்களை நாளுக்கு நாள் update செய்து கொள்ளுங்கள். பல புதிய  உங்கள் தொழில் சார்ந்த விசயங்களை கற்றுக் கொள்ளுங்கள். 
8. உங்கள் தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். சோர்ந்து விடாதீர்கள். 
9.  உங்கள் தொழிலில் உள்ள குறைகளை கேட்டு அதனை சரி செய்யுங்கள்.
10. உங்கள் தொழிலுக்கான Finace பற்றி Plan செய்யுங்கள். 
மேலும் உங்களின் தொழில் சார்ந்த சந்தேகங்களுக்கு தீர்வு கான  நம் சேனலை Subscribe செய்வதன் மூலமும் நம் Blogger பக்கத்தை பின் தொடர்வதன் மூலமும் பதில் கிடைக்கும். மேலும் சந்தேகங்களுக்கு msmeonline0@gmail.com என்ற இமெயில் முகவரியை தொடர்புக் கொள்ளுங்கள். 


இந்த கட்டுரையை படித்தமைக்கு நன்றி. 

கட்டுரை பற்றி:

இதனை எழுதியவர்: 
திரு. அஜித் குமார்
கட்டுரை வெளியீடு: 
MSNE Chennai
Content copyright: 2021@MSNEChennai.blogspot.com
Any queries & Feedback Contact:
Msnechennai1@gmail.com
Msme Registration Contact ( Paid ):
9566278948


கருத்துரையிடுக