free Skill Development Training for youngsters - MSNE Chennai

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீன் தயாள் உபாத்தியாய என்ற ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் சென்னையை தவிர இதர மாவட்டங்களில் திறன் பயிற்சியை இலவசமாக வழங்கி வருகிறது. இதனை பற்றிய தகவல்களை இந்த கட்டுரையில் காண்போம்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்  இந்த திறன் பயிற்சியில் 28000 க்கும் மேற்ப்பட்ட இளைஞர்களுக்கு இந்த நடப்பாண்டில் இலவசமாக இந்த திறன் பயிற்சியை வழங்குவதை இலக்காக வைத்துள்ளது. அதன்படி 18 வயது முதல் 35 வயது நிரம்பிய இளைஞர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த திறன் பயிற்சியில் இலவசமாக சீருடை மற்றும் தங்கும் இடம் வழங்கப்படுகிறது. இதனை ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்தி கிராம புற இளைஞர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும். அதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள முடியும்.

பயிற்சி காலம்:
மூன்று முதல் ஆறு மாதங்கள் இந்த பயிற்சி நடைபெறும்.

பயிற்சியின் பயன்: 
இலவச பயிற்சி,

தங்குமிடம் இலவசம்,

சீருடை, பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படுகிறது,

விருப்பமுள்ள இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

திறன் பயிற்சியில் எவ்வாறு கலந்து கொள்ளவது?
இந்த பயிற்சியை வழங்க அனைத்து மாவட்டங்களிலும் 130 பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள நினைக்கும் இளைஞர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாநில ஊரக வாழ்வாதார இயக்கக அலுவலகம் மற்றும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தினமலரில் வெளியான ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக் கொள்ள 155330 என்ற லேண்ட் லைன் எண்ணும் பகிரப்பட்டுள்ளது. 


கருத்துரையிடுக