Aspire Scheme in Tamil | MSNE Chennai | Govt. Of India, Ministry of MSME

Aspire:  
      A Scheme for promotion of innovation, Rural Industries and Entrepreneurship ( புதுமையான கிராமப்புற தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் திட்டம்). இது ஒரு MSME இந்திய அரசின் திட்டமாகும். 

Aspire திட்டத்தின் துவக்க காரணம்:

1. வேளாண் துறையில் புதுமைக்கான ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவிப்பதற்கும், 

2.  தொழில் முனைவோர்களை விரைவுப் படுத்த Incubation மையங்களை அமைப்பதற்கும், 

3. தொழில் நுட்ப மையங்களுக்கான வலையமைப்பு ( Network Centers) அமைப்பதற்கும் இத்திட்டம் துவங்கப்பட்டது. 


இந்த Aspire திட்டத்தை பிரித்து பார்ப்போம். A Scheme for promotion of 
1. innovation, 
2. Rural Industries and Entrepreneurship

1. Innovation Business என்றால் என்ன? 
ஒரு புதிய பொருட்கள் அல்லது சேவைகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவான பிரச்சனைக்கு ஒரு தீர்வாகவும், வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்வாய்ப்பை உருவாக்கும் ஒரு Unique ஆன தொழில் Innovation Business ஆகும்.  ( MSNE Chennai பார்வையில்). 
எடுத்துக்காட்டாக
ஒரு காலத்தில் வெளியே சாப்பாடு வாங்கி சாப்பிட நாம் ஓட்டலுக்கு செல்லும் நிலைமை மாறி இன்று  ஒட்டுமொத்த ஒட்டல்களின் மெனு முதற்கொண்டு எப்படி சமைக்க வேண்டும் எப்படி டெலிவரி செய்ய வேண்டும் என்பது வரை நாம் தீர்மானிக்கும் வகையில் ஒரு புதுமையான Innovation idea வில் அந்த உணவை டெலிவரி செய்பவருக்கு வேலைவாய்ப்பு. டெலிவரி செய்பவர் ஒட்டல் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் வகையில் ஒரு App ஐ உருவாக்கி அந்த App ஐ நிர்வாகம் செய்ய ஒரு கம்பெனி. அதில் உள்ள பணியாளர்களுக்கு வேலை என  சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவான பிரச்சனைக்கு ஒரு தீர்வாகவும் வேலைவாய்ப்பு தொழில்வாய்ப்பை உருவாக்கும் ஒரு Unique ஆன தொழிலே Innovation Business ஆகும். 

இது போன்ற  Innovation ஐ Rural Area க்களில் அறிமுகப்படுத்தி Entrepreneurs களை உருவாக்குவதே இந்த  Aspire திட்டத்தின் நோக்கம். 

2. Rural Industries and Entrepreneurship:
140 கோடி உள்ள இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதம் மேல் சம்பந்தப்பட்டது இந்த விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் துறைகளில் தான். ஆனால் விவசாயத்தில் கிடைக்கும் லாபம் குறைவு ஏனென்றால் விவசாயம் பொருட்களை உற்பத்தி செய்கிறது ஆனால் buy Products ஆக தயாரிப்பதில்லை. அந்த பொருளை மிகஷகுறைந்த விலையில் கொள்முதல் செய்து அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை அதிக விலைக்கு விற்று அயல்நாட்டு கம்பெனிகள் லாபம் அடைகிறது. ஒரு எடுத்துக்காட்டாக இப்படி விவசாயம் சார்ந்து உற்பத்தி செய்யும் தேங்காய் கொண்டு Coir products  ஆன  கயிறு, தரைமிதிப்பான், கூடை,  பிரஸ், பூந்தொட்டி என மேலும் தேங்காய் கொண்டு தேங்காய் எண்ணெய், Lotion, என பல பொருட்களை உருவாக்க தேவையான Support களை Incubation center வழங்குகிறது. இதற்கு காரணம் நம் நாட்டில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதே மிக முக்கியமான குறிக்கோள். 

2.1 Incubation Center என்றால் என்ன? 
Incubation - அடைக்காத்தல்:
எடுத்துக்காட்டாக:
ஒரு கோழி தான் இடும் முட்டைகளை எவ்வாறு அடைக்காத்து கோழிக்குஞ்சுகளை வெளிக்கொண்டு வர அதற்கான ஒரு முழுமையான அமைப்பை கொண்டு வருகிறதோ அது போல ஒரு சிறிய தொழில் ஐடியாக்களை பெரிய தொழிலாக மாற்றவோ அல்லது ஒரு Product க்கான ஐடியாக்களை  மட்டுமே கொண்டு வந்து அந்த Product ஐ முழுமை அடைய செய்ய என்னென்ன Support எல்லாம் தேவையோ அதனை வழங்குவது Incubation center. 

1. Business Plan Preparation
2. Technology Support
3.  Core Knowledge
4. Essential Things and support
இது போன்ற  பலவிதமான Support களை வழங்குவது Incubation center. 
எப்படி விண்ணப்பத்தை பதிவு செய்வது:
உங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற வேண்டும் என்றால் Msme அமைச்சகத்தின் செயலாளராக தலைமை தாங்கும் கவுன்சிலான Msme அமைச்சகத்தின் Aspire Scheme Steering Committeeக்கு உங்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். 

Aspire உதவியின் தன்மை, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 
2014 - 16 நிலைப்படி 80 Livelihood Business Incubators ஐ Nsic, Kvic  அல்லது Coir board அல்லது இந்திய அரசு அல்லது மாநில அரசுகள் உடைய மற்ற நிறுவனங்கள்/ ஏஜென்சி மூலம் அமைக்கப்படும். இதன் முழுமையாக தகவல் அறிய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து மேலும் படியுங்கள். 

MSNE Chennai:
உங்கள் தொழிலை Msme Udyam Registration இல் பதிவு செய்ய வேண்டுமா? 
9566278948 என்ற நம்பருக்கு வாட்ஸ்அப் பண்ணுங்கள். 
YouTube channel:

கருத்துரையிடுக