How to start Business in Tamilnadu | MSNE Chennai | Ajith Kumar M

வணக்கம் தொழில்முனைவோர்களே! 

நான் உங்கள் அஜித் குமார். MSNE Chennai - YouTube channel, Blog மற்றும் Website இன் Founder. இதில் நான் உங்களுக்கு தொழில் தொடங்குவதற்கான அனைத்து வழிகள் பற்றி விவரமாகவும் உங்களுக்கு புரியும் வகையில் மிகத் தெளிவாகவும் எழுதியுள்ளேன்.  இதனை இலவசமாக படிக்கலாம். இதை படித்து பயன் பெறுங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயன் பெறட்டும்பெறட்டும்.

முன்னுரை:

ஒரு  தொழில் என்பது நாட்டின் பொருளாதாரத்தோடு தொடர்புடையது. நாட்டை வல்லரசு நாடக மாற்றுவது இளைஞர்கள் கையில் உள்ளது என பலர் கூற அனைவரும் இதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு வல்லரசு நாடு (Developed Nation) என்பது உயர் தரமான வாழ்க்கை முறை, வளர்ந்த பொருளாதாரம் என சொல்லலாம். இந்த இரண்டுமே நாம் அனைவரும் தொழில் செய்வதால் நம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க முடியும் அவ்வாறு நம் நாட்டின் பொருளாதாரம் வளருமானால் உயர் தரமான வாழ்க்கையினை நம் நாட்டு மக்களும் வாழ முடியும். அதனால் அனைவரும் ஒரு தொழிலை தேர்வு செய்யுங்கள், அதனை பற்றிய தகவல்களை திரட்டுங்கள், அதனை கற்றுக் கொள்ளுங்கள், அதற்கான ஆலோசனைகளை பெறுங்கள் இவ்வாறு பல படிகள் நீங்கள் கடப்பதன் மூலம் தொழில் முனைவோராக நீங்கள் மாற முடியும். அதற்கு MSNE Chennai என்றும் உங்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும். முதலில் நீங்கள் தொழில் துவங்க வேண்டும் என்றால் என்ன வகையான தொழில்கள் நம்மை சுற்றி உள்ளது என்பதை முதலில் அறிய வேண்டும். அதற்கு அடுத்து உள்ள தகவலை தெளிவாக படியுங்கள். 

தொழில்களின் வகைகள்:

நம் தமிழ்நாட்டில் பல தொழில்கள் உள்ளது.  அப்படிப்பட்ட தொழில்களை நாம் ஆரம்ப கால முதலே,

1. தயாரிப்பு தொழில் ( Manufacturing) 

2. சேவைத் தொழில் (Service) 

3. வாங்கி விற்கும் தொழில்

              - Trading

              - Retail

              - Wholesale

4. விவசாயம் சார்ந்த  தொழில்கள் என மேற்கண்ட வகைகளில் நாம் அனைத்து வகையான தொழில்களையும் அடக்கி விட முடியும். அந்த  வகைகளில் நாம் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் செய்யும் இரண்டும் அடங்கும். இப்படி வகைகளாக இருக்கும் தொழில்களை அதன் அளவுகளின் அடிப்படையில் வெவ்வேறு Scale ளாக பிரிக்கலாம். அதனை பற்றி அடுத்த தலைப்பில் படியுங்கள். 

தொழில்களை நாம் இன்று  மூன்றுக்கும் மேற்பட்ட ஸ்கேல்களாக பிரிக்கின்றோம்:

1. Micro scale business (+ Cottage Business Include) 

2. Small scale business

3. Medium scale business

4. Large scale business (Champions) என அதன் முதலீடு மட்டும் இல்லாமல் Turnover மூலம் பிரிக்கலாம். 

இதனை Ministry of Micro Small Medium Enterprises கீழ்க்கண்டவாறு பிரித்துள்ளது:

Micro - 1 கோடிக்கு கீழே Investment மற்றும் 5 கோடிக்கு கீழே Turnover இருந்தால், 

Small - 1 கோடி முதல் 10 கோடிக்கு கீழே Investment மற்றும் 5 முதல் 50 கோடிக்கு கீழே Turnover இருந்தால், 

Medium - 10 முதல் 50 கோடிக்கு கீழே Investment மற்றும் 50 முதல் 250 கீழே Turnover இருந்தால், 

Large - 50 கோடிக்கு மேல் Investment மற்றும் 250 கோடிக்கு மேல் Turnover இருந்தால் Large மற்றும் Champion என வரையறுக்கப்படுகிறது. இப்படிபட்ட அளவுகளின் அடிப்படையில் நீங்கள் தொழில் துவங்கி தொழில் முனைவோர் ஆக அடுத்த தலைப்பில் உள்ள தகவல்களை படியுங்கள். 

நீங்கள் தொழில் முனைவோர் ஆக  வேண்டும் என்றால் நீங்கள் கடக்க வேண்டிய படிநிலைகள்:

எந்த ஒரு வகையான தொழில்கள் மற்றும் அளவுகளில் நீங்கள் தொழில் துவங்க நினைத்தாலும் நீங்கள் கீழ் உள்ள இந்த 10 படிகளில் உங்களுக்கு பொருந்தும் படகளை  கடந்து தான் துவங்க வேண்டி இருக்கும். அவை

  1. உங்கள் தொழிலைத் தேர்ந்தெடுங்கள் 


  1. அதனை பற்றிய தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை பெறுங்கள்


  1. தொழில் செய்வதற்கான Land and Building ஐ தேர்வு செய்யுங்கள்


  1. Project பற்றிய கருத்துகளை மற்றும் தகவல்களை பெறுங்கள்


  1. Project கான  சாத்தியக்கூறு ஆய்வை தயார் செய்யுங்கள்


  1. Raw materials, plant and machinery காக செல்லுங்கள்


  1. உங்கள் Project கான கடன்களை தேர்வு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்


  1. License and Permits களை  Local authority இடம் இருந்து பெறுங்கள்


  1. உங்கள் தொழிலுக்கான தொழில் பதிவுகளை செய்யுங்கள்


  1. உங்கள் வணிகத்தை துவங்குங்கள்

மேற்கண்ட  பத்து படிநிலைகளை கடந்தால் நீங்கள் தொழில் முனைவோர்களாகி விட முடியும் உங்கள் தொழிலையும் துவங்கி விட முடியும். ஆனால் அதில் நிலைத்து நிற்க கீழ் கண்ட படிநிலைகளை கடந்தால் மட்டுமே அதில் நிலைத்து நின்று சாதிக்க முடியும்.

தொழில் நிலைத்து நிற்க கடக்க வேண்டிய படிநிலைகள்:

1. நீங்கள் தொழிலில் நிலைத்து நிற்க உங்களுக்கு நீங்களே சவால் விட வேண்டும். 

2. உங்கள் தொழிலை விரும்பி செய்ய வேண்டும். 

3. நீங்கள் தொழில் அடுத்த கட்டம் நகர உங்கள் தொழிலில் நீங்கள் தான் ராஜா என நிலைத்து நிற்க தைரியமாக Risk எடுக்க வேண்டும். 

4. உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். 

5. உங்கள் இலக்கு என்ன என்பதை தீர்மானித்து செயல்படுங்கள். 

6. ஒரு நல்ல Business manக்கு தன்னுடைய customer யாரென்று தெரியும். 

7. உங்கள் தொழிலில் நிலைத்து நிற்க நீங்கள்  Current சந்தை, மார்க்கெட்டிங், அரசாங்கம் என பல விதங்களில் உங்களை நாளுக்கு நாள் update செய்து கொள்ளுங்கள். பல புதிய  உங்கள் தொழில் சார்ந்த விசயங்களை கற்றுக் கொள்ளுங்கள். 

8. உங்கள் தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். சோர்ந்து விடாதீர்கள். 

9.  உங்கள் தொழிலில் உள்ள குறைகளை கேட்டு அதனை சரி செய்யுங்கள்.

10. உங்கள் தொழிலுக்கான Finace பற்றி Plan செய்யுங்கள். 

மேலும் உங்களின் தொழில் சார்ந்த சந்தேகங்களுக்கு தீர்வு கான  நம் சேனலை Subscribe செய்வதன் மூலமும் நம் Blog பக்கத்தை மற்றும் நம் Website ஐ பின் தொடர்வதன் மூலமும் பதில் கிடைக்கும். மேலும் சந்தேகங்களுக்கு msnechennai1@gmail.com என்ற இமெயில் முகவரியை தொடர்புக் கொள்ளுங்கள். 

தொழில் பயிற்சி:

தொழில்முனைவோர்களுக்கு தொழில் பயிற்சி என்பது இன்றி அமையாத ஒன்று. அதனால் நான் இந்த புத்தகத்தின் ஒரு பகுதியாக 8th, 10th, 12th, College Students, house wife, employee, Sc, St என அனைவரும் கற்றுக் கொள்ளும் வகையில் உள்ள அரசு அலுவலகங்கள் தகவல்கள் கீழே வழங்கியுள்ளேன். 

1. MSME DEVELOPMENT INSTITUTE, CHENNAI (MSME DI)

இது ஒரு மத்திய அரசு அலுவலகம். இது  Micro Small Medium Enterprise Development Institute. இதன் மூலம் நீங்கள் பயிற்சி மற்றும் அல்லாமல் தொழில் துவங்க தேவையான ஆலோசனைகள், திட்ட அறிக்கைகள், தொழில் கண்காட்சிகள், MSME உத்யம் பதிவு என பல சேவைகளை இலவசமாக செய்து வருகிறார்கள். இவர்களுடைய அலுவலக முகவரி, இமெயில் முகவரி, தொலைபேசி எண், வலைத்தள முகவரி எண அனைத்து தகவல்களும் கீழேயுள்ளது. 

ADDRESS:

65/1, GST ROAD, GUINDY INDUSTRIAL ESTATE,

MSME BHAWAN CAMPUS, 

GUINDY, CHENNAI-600032

OFFICE NUMBERS: 044 22501011/12/13/14

EMAIL: dcdi-chennai@dcmsme.gov.in

WEBSITE LINK: http://www.msmedi-chennai.gov.in/GARMS_Admin/home.aspx


2. ENTREPRENEURSHIP DEVELOPMENT INSTITUTE, CHENNAI (EDI) 

இது ஒரு தமிழ்நாடு அரசு அலுவலகம். இது பல பயிற்சி, தொழில் ஆலோசனைகள், EDP பயிற்சி என பல சேவைகளை வழங்கி வருகிறது இதனை பற்றி அறிய கீழே கிளிக் செய்யுங்கள். 

மேலும் இந்த அலுவலகத்தின் அலுவலக முகவரி, இமெயில் முகவரி, தொலைபேசி எண், வலைத்தள முகவரி என அனைத்து தகவல்களும் கீழேயுள்ளது. 

ADDRESS:

Parthasarathy St, Hindustan Teleprinters Staff Quarters,

SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032

OFFICE NUMBERS: 044 22252081/22252082

WEBSITE LINK: https://www.editn.in/


3. CFTI

இது ஒரு மத்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி பயிற்சி நிறுவனம். இது Central footwear Training Institute. இது சென்னை கிண்டியில் உள்ளது. இதில் முக்கிய பயிற்சி Footwear  Design and  manufacturing என்றாலும் இதில் கூடுதலாக பல பயிற்சிகள் தரப்படுகிறது. அதனை கீழே படியுங்கள். 


1. Gold Appraisal Training

2. Lean Sig sigma green belt

3. Cell phone servicing

4. Electric vehicles

5. Solar panel installation

6. Export Import

7. Cctv & Security installation Training

8. Laptop complete chip level training

9. Certified packaging technologist

10. Finace, account, Tally Based Training

11. Lean Sig sigma Black Belt

இது போன்ற பல பயிற்சிகள் இந்த அலுவலகம் தருகிறது. 

ADDRESS:

CFTI BUILDING, MSME BHAWAN CAMPUS, 65/1, GST ROAD, GUINDY INDUSTRIAL ESTATE,

GUINDY, CHENNAI-600032

OFFICE NUMBERS: 044 22500876

WEBSITE LINK: https://www.cftichennai.in/


4. MSME PPDC AGRA

இது மத்திய அரசு அலுவலகம். இது டெல்லி ஆக்ராவில் உள்ளது. கொரனா காலம் என்பதால் அனைத்து பயிற்சிகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பெங்களூர் என பல மாநிலங்களில் இருந்தும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் என பல மாவட்டங்களில் இருந்தும் இருக்கும் இடத்தில் இருந்தே கற்றுக் கொள்ள முடியும். இவர்களுடைய பயிற்சிகள் பற்றி கீழே கொடுத்துள்ளேன். 


1. Electric Vehicle training

2. Solar pannel Training

3. Export Procedure and Documentation Training

4. Cnc Programing

5. Electric vehicle Charging Station Training

6. How to Start Import Export Business

7. Edp Training

8. Business analytics with Phython

9. Lean manufacturing training

10. Digital marketing

11. Injection molding process

12. Organic and hydroponics farming

13. Website Design and Development

14. Hr analytics Training

15. Solar pv installation and maintenance

16. Income tax training

17. Lean sig sigma green belt

18. Lean sig sigma black belt

19. Gst training

20. Agriculture based training

21. Supply Chain

22. Computer hardware and Networking

23. Edp training in textile sector

24. Food business management training

WEBSITE LINK: http://www.ppdcagra.dcmsme.gov.in/


5. CITD

ADDRESS:

CITD BUILDING, 65/1, GST ROAD, GUINDY INDUSTRIAL ESTATE,

MSME BHAWAN CAMPUS, 

GUINDY, CHENNAI-600032


6. NATIONAL SKILL TRAINING INSTITUTE, CHENNAI (NSTI) 

ADDRESS:

Guindy Institutional Area, SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032

OFFICE NUMBERS: 044 2250 1211

WEBSITE LINK:http://nstichennai.dgt.gov.in/


7. CIPET

ADDRESS:

TVK INDUSTRIAL ESTATE, SIDCO INDUSTRIAL ESTATE, OLYMPIA TECH PARK OPPOSITE ROAD, GUINDY, CHENNAI-32

OFFICE NUMBERS: 044 22254780


8. TAMILNADU SKILL DEVELOPMENT CORPORATION

ADDRESS:

1ST FLOOR, EMPLOYEEMENT OFFICE,  SIDCO INDUSTRIAL ESTATE, 

GUINDY, CHENNAI-600032

OFFICE NUMBERS: 044 22500107

WEBSITE LINK: https://www.tnskill.tn.gov.in/

மேலே அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் அறிய அந்தந்த அரசு அலுவலகங்களின் நேரடி வலைத்தளம் லிங்க்  கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்து அரசு அலுவலகங்களில் என்னென்ன பயிற்சிகள் உள்ளன எப்போது வழங்கப்படும் என்பதை இதன் மூலம் அறிய முடியும்.  இது போன்ற பல பயிற்சி அரசு மற்றும் தனியார் பயிற்சி அலுவலகங்கள் உள்ளது. 


மத்திய அரசு  தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கும் சில முக்கிய தொழில் கடன்கள்:

உங்களுக்கு உங்கள் தொழிலுக்கு தேவையான பணத்தை முதலீடு செய்ய கடன் தேவையில்லை என்றாலும் இந்த தொழில் கடன்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. 

1.Mudra loan:

M - MICRO

U - UNITS

D - DEVELOPMENT &

R - REFINANCE

A - AGENCY

 முத்ரா விவசாயம் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கும், பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளுக்கும் கிடையாது. இது முழுமையாக சிறு, குறு நிறுவனங்களுக்காக கொண்டு வரப்பட்டது. இது பிரதம மந்திரியின் PMMY (Pradhan mandri mudra yojana) திட்டம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

முத்ரா திட்டத்தின் கடன் தொகை:

முத்ரா வின் அதிகபட்ச லோன் ரூபாய்

10,00,000 லட்சம். இதில் மூன்று திட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. 

1. சிஷு

2. கிஷோர்

3. தருண்

Mudra loan online apply | Mudra loan 2021 | Mudra loan details | Pmmy - YouTube

இதனை பற்றிய விளக்க வீடியோ வேண்டுமென்றால் மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

சிஷு, கிஷோர், தருண்:

சிஷு:

சிஷு வில் நீங்கள் 50,000 வரை லோன் பெற முடியும். இது 50,000 வரை கடன் பெற நினைக்கும் அனைத்து குறு நிறுவனங்களும் வாங்க முடியும்.

கிஷோர்:

கிஷோர் இத்திட்டத்தின் கீழ் ரூபாய் 50,000 இல் இருந்து 5,00,000 லட்சம் வரை கடன் பெற முடியும்.

தருண்:

இத்திட்டத்தின் கீழ் ரூபாய் 5,00,000 முதல் 10,00,000 வரை கடன் பெற முடியும்.

வட்டி வீதம்:

அரசு சார்ந்த வங்கிகளில் 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி விகிதம் உள்ளது.

அதுவே தனியார் வங்கிகளில் 18 முதல் 20 வரை வட்டி விகிதம் உள்ளது.

யாரெல்லாம் இதனை வாங்கலாம்:

1. Manufacturing business

2. Service business

3. retail, traders

Property and partnership companies மட்டுமே கிடைக்கும். Private limited Company முத்ரா வின் லோன் பெற இயலாது.

தேவையான ஆவணங்கள்:

Aadhaar card

Pan card

Bank details

Project report

Quotation

Photo

Caste Certificate

Educational Certificates

பேங்க் ஐ பொறுத்து ஆவணங்களும், Income tax, Gst என தொழில் பதிவுகளும் கேட்கப்படும்.

முத்ரா கடன் பதிவு செய்யும் வலைதளம்:

udyamithra.in

2. PMEGP Loan:

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP)  

விளக்கம்: 

1. புதிய சுயதொழில் முயற்சிகள்(New startup)/ திட்டங்கள் / சிறிய நிறுவனங்களை அமைப்பதன் மூலம் நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.  

2. இத்திட்டத்தை காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (KVIC) தேசிய அளவில் நோடல் ஏஜென்சியாக செயல்படுத்துகிறது. மாநில அளவில், இந்த திட்டம் மாநில கே.வி.ஐ.சி இயக்குநரகங்கள்(Kvic), மாநில காதி மற்றும் கிராம தொழில் வாரியங்கள் (KVIPS) மற்றும் மாவட்டம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.  

3. கைத்தொழில் மையங்கள் (DIC'S) மற்றும் வங்கிகள் மூலம் PMEGP கீழ் புதிய திட்டங்கள் மட்டுமே கடன் அனுமதி வழங்கப்படும்.

 உதவியின் தன்மை: 

PMEGP-யின் கீழ் மானியம் (திட்ட செலவின்%): பொது வகை (GENERAL CATEGORY) 15% (நகர்ப்புற), 25% (கிராமப்புற); சிறப்பு வகை(SPECIAL CATEGORY) (உட்பட)  எஸ்சி / எஸ்டி / ஓபிசி / சிறுபான்மையினர் / பெண்கள், முன்னாள் படைவீரர்கள், உடல் ஊனமுற்றோர், என்இஆர், மலை மற்றும் எல்லைப் பகுதிகள் போன்றவை): 25% (நகர்ப்புற), 35% (கிராமப்புற). 

யார் விண்ணப்பிக்கலாம்: 

எந்தவொரு தனிநபரும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்  வயது விண்ணப்பிக்கலாம் (திட்ட செலவுக்காக  உற்பத்தியில் 10 லட்சத்துக்கும், சேவைத் துறையில் 5 லட்சத்துக்கும் மேல்.  அவர் குறைந்தது VIII(8TH STANDARD) தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  சுய உதவி குழுக்கள், சங்கங்கள் பதிவு சட்டம், 1860 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்;  உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், மற்றும் அறக்கட்டளைகளும் தகுதி பெற்றவை. 

விண்ணப்பிப்பது எப்படி: 

ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  பயனாளிகள் தங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில்  என்ற   https://www.kviconline.gov.in/pmegpeportal/jsp/pmegponline.jsp  முகவரியில் சமர்ப்பிக்கலாம். 

யாரை தொடர்பு கொள்ள வேண்டும்: 

Kvic office Chennai:

326, Avvai Shanmugam Salai, Ganapathy Colony, Gopalapuram, Chennai, Tamil Nadu 600086

Rjd office Chennai:

5/6, Guindy Industrial Estate, SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தொழில் மையங்களில் முகவரி:

List of Dic offices in Tamilnadu

மேலும் தகவல்:

Individual மட்டும் இல்லாமல் Trust, Societies, Institutions, Self help Groups இதில் பதிவு செய்ய முடியும். 

3. மற்ற கடன்கள்:

மேலே உள்ள கடன்கள் மற்றும் பிற கடன்கள் பற்றிய வீடியோ விளக்கம் அடங்கிய லிங்க் கீழேயுள்ளது. 

https://youtu.be/D9za4JEnhSA

Business Registration:

தொழில்முனைவோர்களின் அளவு மற்றும் முதலீடுகளின் அடிப்படையில் அதனை நாம் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்:

1. Proprietor Company

2. Partnership Company

3. Private Limited Company

4. Public Limited Company

5. Limited Liability Partnership Company

6. One Person Company

7. Hindu Undivided Family 

8. Society

9. Trust

என தொழில் வகைகள் தொழிலின் அளவு, முதலீடு, பயன்கள், என இதனடிப்படையில் பிரிக்கப்படுகிறது. உங்கள் தொழிலை தொடங்குவதற்கு மேற்கண்ட வகைகளின் அடிப்படையில் அந்த பதிவுகளை முதன்மையாக செய்து கொள்ளுங்கள்.

1. Msme Udyam Registration

இதனை பற்றிய முழுமையான விவரம் மற்றும் இலவசமாக பதிவு செய்ய மற்றும் அதனை பற்றிய முழுமையான தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

2. License for Compulsory Licencable items

3. Municipal / Local Body License

4. Plant Permit License

5. Registration under Factories Act. (For Units employing 10 or more workers with Power) 

6. Registration under Pollution Control Rules

7. Registration with Fire & Rescue Services 

8. Licensing by health Department for Food Products

9. Food Safety and Standard Authority of india- License ( Fssai) 

10. Drug Licence for Drugs and Cosmetic Products

நீங்கள் குளியல் சோப் மற்றும் சேம்பு போல அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கிறீங்களா? அப்போ இந்த கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். அதற்கான சான்றிதழ் பற்றிய தகவல்களை அறிய முடியும். 

11. Patents & Designs Registration 

12. Trade Mark Registration

13. Import-Export (I.E.) Code Number 

14. ISI Mark 

15. Registration under VAT 

16. Central Excise 

17. Goods and Service Tax 

18. Income Tax 

19. ISO Registration

INFRASTRUCTURE Approvals:

1. Factory Accommodation Industrial Plots / Sheds (SIDCO) Juge 

2. Power Connection Lead Bank

School Required Licensing and Registration ( Educational Institute Required License) 

• Sanitary License

• Public Building License

• Fitness Certificate

• Water Testing

• Building Blue Print

• Local Authorities License

இது போன்ற பல தொழில் பதிவுகள் நம் இந்தியாவில் தொழில் செய்ய தேவைப்படும். நீங்கள் சென்னையில் தொழில் செய்ய தேவையான பதிவுகளை கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்யலாம். கூடுதலாக அதில் அலுவலக தொலைபேசி எண் மற்றும் வலைதளம் லிங்க்கும் உள்ளது. 

உங்களுக்கு Msme மற்றும் ஏற்றுமதி இறக்குமதி பதிவு செய்ய வேண்டும் என்றால்  நம் இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Msnechennai1@gmail.com

இந்த கட்டுரையை  படித்தமைக்கு நன்றி. 


Article Details:

Author: Ajith Kumar M

Publication:  MSNE Chennai

Content copyright: 2021 MSNE Chennai. 

Any queries & Feedback Contact: Msnechennai1@gmail.com

Website: www.msnechennai.xyz

YouTube: YouTube.com/c/msnechennai                         

                                       

கருத்துரையிடுக