நம் சேனலில் வீட்டில் இருந்து செய்ய கூடிய சோப்பு ஆயில் தயாரிப்பு தொழில் பற்றிய வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த தொழிலை நீங்கள் எடுத்து செய்ய தேவையான தயாரிப்புகளை எங்கே சென்று வாங்குவது என்ற சந்தேகம் உங்களிடம் இருக்கும். அதற்கு பதிலாக இந்த கட்டுரை இருக்கும்.
தொழிலை பற்றி:
வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம் . இதன் மூலம் நன்றாகச் சம்பாதிக்கலாம் .
தயாரிப்பது எப்படி ?
ஒரு பிளாஸ்டிக் வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் காஸ்டிக் சோடா 100 கிராம் போட வேண்டும் . தண்ணீர் சூடாகும் . மற்றொரு வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் சோடா ஆஷ் ( வாஷிங் பவுடர் ) ஒரு கிலோ போட வேண்டும் . அதுவும் சூடாகும் . இன்னொரு வாளியில் 2 லிட்டர் நல்ல தண்ணீரில் யூரியா ஒன்றரை கிலோ போட வேண்டும் . தண்ணீர் குளிர்ந்து போகும் . 3 வாளி நீரையும் ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும் . அவை சம வெப்ப நிலையை அடையும் . 3 வாளிகளில் உள்ள நீரை ஒரு கேனில் கொட்டி கலக்க வேண்டும் , இன்னொரு வாளியில் சிலரி ஒரு கிலோ , ஒலிக் ஆசிட் 100 கிராம் கலக்க வேண்டும் . அதை கேனில் உள்ள கலவையில் கொட்டி எவர் சில்வர் கரண்டியால் நன்கு கலக்க வேண்டும் . நுரை பொங்கி வரும் . 2 மணி நேரம் காத்திருந்தால் நுரை வற்றி , சோப் ஆயில் கிடைக்கும் . அதில் நறுமண லிக்விட் 15 மிலி கலந்தால் சோப் ஆயில் தயார் . இதன் மூலம் 10 லிட்டர் சோப் ஆயில் கிடைக்கும் .
உபயோகிக்கும் முறை :
200 மிலி சோப் ஆயிலில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும்.10 முதல் 15 துணி வரை அரை மணி நேரம் ஊறவைத்து கையாலோ , வாஷிங்மெஷின் மூலமோ துவைக்கலாம் . துணி துவைக்க மட்டுமல்ல , பாத்திரம் கழுவ , தரை , கழிப்பறை , பாத்ரூம் , வாகனங்களைச் சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம் .
என்னென்ன தேவை ?
சிலரி , காஸ்டிக் சோடா , சோடா ஆஷ் , யூரியா , ஒலிக் ஆசிட் , பெர்ப்யூம், சிறுதொழில் செய்யலாம் ... சிறப்பாக வாழலாம் .... தண்ணீர் . இவை அனைத்தும் கடைகளில் கிடைக்கிறது . இந்த தொழில் செய்ய பெரிய முதலீடு தேவைப்படாது . மேலும் பெரிய அளவில் இடவசதியும் தேவை இல்லை . மூலப் பொருட்கள் , தயாரித்த சோப் ஆயில்கள் இருப்பு வைக்க வீட்டுக்குள் பாதுகாப்பான சிறு இடம் போதுமானது .
வாங்கி விற்க:
Jeevan Enterprises
Proprietor: A. Soosai muthu
Brand name: Malars
Mfg: household cleaning products
No:9, Easwaran koil 2nd street, RE nagar, porur, Chennai-600116.
Enquiry mail: t4sgunacaj01@gmail.com
கருத்துரையிடுக
கருத்துரையிடுக