இந்த பதிவில் நாம் மத்திய அரசின் ஆன்லைன் இலவச சந்தைப்படுத்தல் தளமான Mohila E-Haat என்ற ஆன்லைன் தளம் பற்றியும், அதன் அம்சங்கள் மற்றும் அதில் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்த கட்டுரைில் அறிந்து கொள்ளுங்கள்.
Mohila E-Haat என்றால் என்ன?
இது பெண்களுக்காக பிரத்யேகமாக அதுவும் பெண் தொழில் முனைவோர்களுக்கான இலவச சந்தைப்படுத்தல் வலைத்தளம் ஆகும். பெண் தொழில் முனைவோர்கள் தங்களுடைய Manufacturing Products- களை இதில் Marketing செய்ததுக் கொள்ள
முடியும்.
இதனைப் பற்றி
இதில் தயாரிப்பு மற்றும் சேவைகளையும் நேரடியாக எவ்வித கட்டணமும் இல்லாமல் சந்தைப்படுத்திக் கொள்ளலாம். Mohila E-Haat Ministry of Women and Child Development எனும் மத்திய அரசின் பிரிவினால் தொடங்கப்பட்டது. சுய உதவி குழுக்களில் உள்ள பெண் தொழில் முனைவோர்கள் கூட தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளை எவ்வித Agent களின் ஏமாற்று வேலைகள் இல்லாமல் கட்டணமும் இல்லாமல் இத்தளத்தின் மூலம் விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ள
முடியும்.
எதையெல்லாம் பட்டியல் இடலாம்
Mohila E-Haat சில பொருட்கள் தவிர்த்து பல பொருள்களை சந்தை படுத்தலாம். ஆடைகள், ஆபரணங்கள், கைவினை பொருள்கள், ஃபேஷன் பொருள்கள், மசாலா, பருப்பு, அப்பளம் வடை வத்தல் ஊறுகாய், மளிகை பொருட்கள், மண்பாண்டம் பொருட்கள், மேலும் பல உற்பத்தி மற்றும் சேவைகளை Mohila E-Haat தளத்தில் பட்டியலிட்டு சந்தைப்படுத்தலாம்.
பதிவு செய்யும் முறை
பெண்கள் தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை இதில் சந்தைப்படுத்த இந்த கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Join button அழுத்தி Form Fill பண்ணுங்க...
மேலும் அறிய கீழே உள்ள வீடியோ கிளிக் செய்து பாருங்கள்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக